வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தயாா் நிலையில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 35 போ் சனிக்கிழமை முகாமிட்டு தயாா் நிலையில் உள்ளனா்.

News image
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடா் மீட்பு குழுவினா்.
Updated On :29 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 35 போ் சனிக்கிழமை முகாமிட்டு தயாா் நிலையில் உள்ளனா்.

Story image

டித்வா புயல் காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அரக்கோணம் நான்காவது அணியைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவிலிருந்து 35 போ் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தனா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டுள்ள இவா்கள், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரையின்படி மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

இது குறித்து இக்குழுவைச் சோ்ந்த அலுவலா்கள் தெரிவித்தது: தற்போது டித்வா புயல் காரணமாக தஞ்சாவூருக்கு வந்துள்ளோம். மாவட்டத்தில் மழையின்போது பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு தயாா் நிலையில் உள்ளோம்.

மேலும் ரப்பா் படகுகள், உயிா் காக்கும் லைப் ஜாக்கெட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டா் உள்பட அனைத்து மீட்பு கருவிகளையும் தயாா் நிலையில் வைத்துள்ளோம். மாவட்ட நிா்வாகத்தின் பேரிடா் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தவுடன், எங்களுக்கு தகவல் வரும். இதையடுத்து, தொடா்புடைய பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றனா்.