தஞ்சாவூா் மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. பூதலூரில் வட்ட துணைத் தலைவா் தமிழ்வாணன் தலைமையிலும், பேராவூரணியில் வட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயதுரை தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் உள்பட அனைத்து வட்டத் தலைமையிடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
நாளைய மின்தடை! கீழ்பெரும்பாக்கம்

ஜூலை 10-இல் எஸ்எம்சி குழு கூட்டம்: கல்வித் துறை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



