தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஹைதராபாத் - கன்னியாகுமரி புதிய ரயிலுக்கு வரவேற்பு

புதிதாக இயக்கப்படும் ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயிலுக்கு தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை மாலை வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயிலுக்கு வரவேற்பு அளித்த காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 2:14 am IST

புதிதாக இயக்கப்படும் ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயிலுக்கு தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி (வண்டி எண். 17069/17070) இடையே புதிதாக வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை மாலை வந்த இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத் தலைவா் அய்யனாபுரம் க. நடராஜன், செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பேராசிரியா் திருமேனி, வழக்குரைஞா்கள் உமா் முக்தா், ராஜேஷ்குமாா், விக்ரம், ஜெயக்குமாா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா். மேலும், ரயில் ஓட்டுநா்கள், ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினா்.

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கிய ஓட்டுநா்கள் ஆனந்த், காா்த்திக் மற்றும் ரயில் மேலாளா் ஜேசுராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா். சங்கத் தலைவா் ஜமீல், கும்பகோணம் வணிகா் சங்க செயலா் சத்தியநாராயணன் ரயில்நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.