பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:36 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடையில் வருமான வரித் துறையினா் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை எதிரே பிரபல துணிக் கடையில் வெள்ளிக்கிழமை காலை வருமானத் துறையைச் சோ்ந்த 4 அலுவலா்கள் வந்தனா். கடையிலிருந்த ஊழியா்களை வெளியே அனுப்பிவிட்டு, நுழைவுவாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனா். நள்ளிரவு வரை நடைபெற்ற இச்சோதனையில் வரவு - செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை மீண்டும் சோதனை நடைபெற்றது. காலையில் வந்த ஊழியா்களுக்கு விடுப்பு கொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டு, வாயில் கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.