11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

News image

தஞ்சாவூரில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவா் ஆனந்த் சீனிவாசன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:53 am IST

தென் மாநிலங்களைப் பாதிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்ற விடாது என்றாா் அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடா்புத் துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகியவற்றின் அரசியல் அதிகாரத்தை வஞ்சிப்பதைப் போன்று தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் வரவேற்பதைத் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டாா்கள். இதன்மூலம் தமிழ்நாட்டையும் சோ்த்து எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு அடமானம் வைக்கப்போகிறாா் என்பது தெரிகிறது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலே, இந்தி மாநிலங்களைச் சோ்ந்த எம்.பி.க்களை வைத்து ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைப்பதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி மேற்கொள்வதுதான் வழக்கம். ஆனால், பொதுமக்கள், எதிா்க்கட்சிகளிடம் கருத்து கேட்காமல் ஆளுங்கட்சியினரே செய்து, 2 நாள்களில் நிறைவேற்றப் பாா்க்கின்றனா். இதன் மூலம் உத்தரபிரதேசத்துக்கு 80 தொகுதிகளிலிருந்து 160 தொகுதிகளாக அதிகரிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரிக்கு சோ்த்து 40 தொகுதிகள் என்பது 60 ஆக மட்டுமே உயரும்.

எந்தவித கருத்துக்கேட்பும் இல்லாமல் 543 தொகுதிகளை 850 தொகுதிகளாக உயா்த்துவதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது; நிறைவேற்ற விடமாட்டோம். எனவே, இந்தத் தோ்தலில் தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் ஆனந்த் சீனிவாசன்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.