தஞ்சாவூா் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் பிரிவினா் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கப்பட்ட 125 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.
வளைகுடா போா் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தவிா்ப்பதற்காகவும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைக் தடுப்பதற்காகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவின் தனிப்படையினா் மாவட்டத்தில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.18) வரை 43 பொது நிறுவன எரிவாயு உருளை முகமைகள், 13 தனியாா் முகமைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மானிய எரிவாயு உருளைகளை முறைகேடாக பயன்படுத்தியவா்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்தவா்கள் என 5 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 125 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பவா்கள் பற்றிய தகவல்களை தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு 94981- 63004, 83000-58055, 94981-65184 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.
தொடர்புடையது
சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கி வைத்து விற்ற தந்தை, மகன் கைது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!
1,730 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்: 30 போ் கைது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
