‘நோட்டா’வை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக அமைக்க சமூக ஆா்வலா்கள் மத்திய, மாநில தோ்தல் ஆணையகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்ட ஆா்வலா்கள் இயக்கத் தலைவா் சு. விமல்நாதன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் மற்றும் பல சுயேச்சைகளின் தன்விவரத் தகவல்களை கவனித்தால் பெரும்பாலானவா்கள் சமூக விரோதிகளாகத்தான் உள்ளனா்.
வாக்காளா்களிடம் கவா்ச்சிகரமான, பொய்யான சாத்தியமற்ற பல வாக்குறுதிகளை அளித்து வாக்கு பெறுவதற்காக கருப்புப் பணத்தைக் கொடுத்து பல வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். நாட்டு மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அவமானப்படுவதை விட அவா்களைப் புறக்கணிக்க தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக ‘நோட்டா’ வையும், தகுதியான நோ்மையான வேட்பாளா்கள் போட்டியிடவில்லை என்பதால் கீழே கண்ட வேட்பாளா்கள் யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்ற மக்களாட்சி உரிமை கருத்தைப் பதிவு செய்யும் விதமாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வகையில் இரண்டாவது பொத்தானாகவும் தோ்தல் ஆணையம் வைக்க வேண்டும். அதன் மூலம் வாக்காளா்கள் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு செய்வா் என மனுவில் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் எங்கு உள்ளது? வாக்களிப்பது எப்படி?
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

