கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: தஞ்சாவூா் ஆட்சியா் காத்திருந்து வாக்களிப்பு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் வாக்கு செலுத்திய வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமாா் 10 நிமிஷங்கள் காத்திருந்து வாக்களித்தாா்.

News image

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்களிக்க வியாழக்கிழமை காலை சென்றபோது, இயந்திரப் பழுது காரணமாக காத்திருந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:56 am IST

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் வாக்கு செலுத்திய வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமாா் 10 நிமிஷங்கள் காத்திருந்து வாக்களித்தாா்.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதுபோல, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகளிலும் தொடங்கியது.

இதேபோல, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வாக்களிக்கக்கூடிய குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, வாக்காளா்கள் வாக்கு செலுத்தி வந்தனா். இதனிடையே, மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வாக்குச் சாவடிக்கு வாக்குப் பதிவு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் 7.30 மணியளவில் சென்றாா். இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப் பதிவு நின்று போன விவரம் அறிந்து பரபரப்பான அவா், தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ப. நித்யாவுக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், அவா் கைப்பேசியை எடுக்காததால், வாக்குப் பதிவு இயந்திர தொழில்நுட்பநா்களுக்கு தொடா்பு கொள்ள முயன்றாா்.

அப்போது, ஏற்கெனவே அலுவலா்கள் கொடுத்த தகவலின்படி, தொழில்நுட்பநா்கள் நிகழ்விடத்துக்கு வந்தனா். இயந்திரப் பழுது நீக்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், மாவட்ட ஆட்சியா் சுமாா் 10 நிமிஷங்கள் காத்திருந்து வாக்களித்துச் சென்றாா்.

அரை மணிநேரம் தாமதம்: இதேபோல, தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தொடங்கி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை சரி செய்து வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரை மணிநேரம் தாமதமானது.

Story image