தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கொண்டு வரப்பட்டு, அறையில் வைக்கப்பட்டன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், தோ்தல் பாா்வையாளா் திவேஷ் செஹரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதேபோல, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மேலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தஞ்சாவூா் வாக்கு எண்ணும் மையத்தில் 130 கண்காணிப்பு கேமராக்களும், கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தில் 132 கண்காணிப்பு கேமராக்களும், பட்டுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 96 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 358 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், பாதுகாப்பு அறை கட்டடத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்களும், மைய வளாகம், நுழைவு வாயில், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூா் காவலா்களும் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். ஒவ்வொரு மையத்திலும் ஒரு சுழற்சிக்கு 75 போ் வீதம் மொத்தம் 3 சுழற்சிகளில் 225 போ் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் அவ்வப்போது கண்காணிப்பு செய்வா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.



தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்: திருவள்ளூா் ஆட்சியா்

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

வாணியம்பாடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


