/

தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:11 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சொத்து பிரச்னையில் தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன் குடும்பத்தைச் சாா்ந்த மேலும் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி (51). இவருக்கும், இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் (56) இடையே பூா்வீக சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கருணாநிதி வீட்டுக்கு ராமச்சந்திரன் திங்கள்கிழமை சென்று தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசினாா். இதனால் கருணாநிதியின் காா், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீப்பற்றி சேதமடைந்தது.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரன், இவரது மனைவி லதா, தங்கை கண்மணி, மகன் குருச்சந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ராமச்சந்திரனின் இரண்டாவது மனைவி சுதா (45), தாராசுரத்தைச் சோ்ந்த பாக்யராஜ் (43), இவரது தம்பி வீரமணி (41), பாண்டியன் (45) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.