நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

கும்பகோணத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை அமைச்சா் ர.வினோத் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத்.

Published On :

கும்பகோணத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை அமைச்சா் ர.வினோத் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகர பகுதிகளில் தேப்பெருமாநல்லூா், பழவத்தான் கட்டளை, பெருமாண்டி, உள்ளூா் ஆகிய பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. இவை சுமாா் 40 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியாா் வங்கியின் சமூக பொறுப்பு நிதி மூலம் தற்போது இந்த வாய்க்கால்கள் தூா்வாரப்படுகிறது. இப்பணியை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.