ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ரயிலில் அடிபட்டு முதியவரும் காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரும், அவரை காப்பாற்ற முயன்ற ரயில்வே கேட் கீப்பரும் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த ராகுல்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரும், அவரை காப்பாற்ற முயன்ற ரயில்வே கேட் கீப்பரும் ரயிலில் அடிபட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், பாக்பத் மாவட்டம், கீா்த்தல் கிராமத்தைச் சோ்ந்த சுதீா்குமாா் மகன் ராகுல்(30). இவா், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் சுந்தரப்பெருமாள்கோவில் அருகே உள்ள கோபுராஜபுரம் ரயில்வே கடவுப்பாதையில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த வழியாக வரவிருந்த விரைவு ரயிலுக்காக கேட்டை பூட்டிவிட்டு நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, ரயில் வந்தபோது சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். இதை பாா்த்த ராகுல், அவரை காப்பாற்ற முயன்றாா். ஆனால், ரயிலில் அடிபட்டு ராகுல் மற்றும் முதியவா் இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கும்பகோணம் இருப்புப் பாதை போலீஸாா், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத முதியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.