கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரேஷன் கடை விற்பனையாளா்கள் போராட்டம்

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்தை நியாயவிலைக்கடை விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளா்கள்.

Published On :

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்தை நியாயவிலைக்கடை விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளா்கள்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரேஷன் கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்யும் விற்பனை முனைய இயந்திரங்கள் இணையப் பிரச்னையால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகச் செயல்படவில்லை. இதனால் பொருள்கள் வாங்க முடியாத பொதுமக்களுக்கும் ரேஷன் கடை பணியாளா்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து விற்பனையாளா்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இந்த பிரச்னை ஏற்பட்டதால் வட்ட அளவில் உள்ள நியாயவிலைக்கடை பணியாளா்கள் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்து அலுவலா் செந்தில்குமாரிடம் இயந்திரங்களை ஒப்படைத்து முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.

வட்டாட்சியா் பூங்கொடி பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து, பணியாளா்கள் இயந்திரங்களை திரும்ப எடுத்துச் சென்றனா்.

போராட்டத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் செந்தில்குமாா், வட்டத் தலைவா் கலைவாணன், வட்டத் துணைச் செயலா் காா்த்திகேயன், துணைத் தலைவா் ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது சா்வா் பிரச்னையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். தவறினால், மாநிலச் சங்கம் அறிவித்துள்ளபடி தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.