FOLLOW US

ON GOOGLE DISCOVER

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஆதாா் இணைக்காத ரேஷன் அட்டைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்படும் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை

News image

ஆதார் அட்டை - file photo

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

ஆதாா் இணைக்காத ரேஷன் அட்டைகளுக்கு மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதாந்திர உணவு தானிய மானியம் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை 26.2.26-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக நியாயவிலைக் கடைகளின் வாயிலாக 1.6 லட்சம் பயனாளிகள் தங்கள் கைப்பேசி எண்களை பதிவு செய்து இணைத்துக் கொண்டுள்ளனா். இதில் 1.02 லட்சம் அட்டைதாரா்களுக்கு ஜூன் 2026-க்கான உணவு தானிய மானியம் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையில் வரவு வைக்கப்பட்டு அவா்களுக்கு டிஜிட்டல் வாலட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை தங்கள் கைப்பேசி எண்களை இணைக்காத அட்டைதாரா்கள் வரும் 21.8.26-க்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும் என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.