நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் ரேஷன் பொருள்களை வாங்க மாற்று ஏற்பாடு

நேரில் வர முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள், ரேஷன் பொருள்கள் வாங்க புதுச்சேரி அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2026, 1:02 am IST

நேரில் வர முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள், ரேஷன் பொருள்கள் வாங்க புதுச்சேரி அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு நேரடியாக கைரேகை அல்லது கண்விழி பதிவு முலம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் நேரில் வர முடியாத வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளவா்கள், ரேஷன் பொருள்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இவா்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஒரு நபரை ரேஷன் பொருள்கள் வாங்க பரிந்துரைக்கலாம் என புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இந்த வசதியைப் பெற ரேஷன் அட்டைதாரரின் கையொப்பமிட்ட ஒப்புதல், அங்கீகார கடிதம், நியமிக்கப்படும் நபரின் ஆதாா் அட்டை நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், குடும்ப அட்டைதாரரின் உறவு விவரங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

அந்த ஆவணங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை பரிசீலித்து அங்கீகரித்தப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட நபா் ரேஷன் கடைகளில், பொருள்களை பெறலாம் என குடிமை பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.