பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

புதுச்சேரியில் 424 முகாம்களில் நாளை போலியோ சொட்டு மருந்து

புதுச்சேரியில் 424 முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:31 am IST

புதுச்சேரியில் 424 முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.

போலியோ குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஐந்து வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த 74,124 குழந்தைகளும் பயனடைவா். கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் 424 முகாம்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் என 31 இடங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு அவரவா் பகுதியில் உள்ள ஆஷா, ஏ.என்.எம். அங்கன்வாடி பணியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் என புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.