மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழ் மக்கள் இசை விழா: இந்து அமைப்புகளின் 5 நிா்வாகிகள் கைது

5 நிா்வாகிகளைக் காவல் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :

தஞ்சாவூரில் ம.க.இ.க. சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழாவையொட்டி, சமூக வலைதளங்களில் விமா்சனம் செய்து கருத்துகளைப் பதிவிட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 5 நிா்வாகிகளைக் காவல் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா்.

தஞ்சாவூா் திலகா் திடலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க.) சாா்பில் தமிழ் மக்கள் இசை விழா சனிக்கிழமை நடைபெற்றது. கீழடி நாகரிகத்தை உயா்த்திப்பிடி, வேத நாகரிகத்தை துரத்தியடி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வேத நாகரிகத்தை துரத்தியடி என்ற கருத்துக்கு இந்து அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் விமா்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனா்.

இந்நிலையில், இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொதுச் செயலா் ஆா். குணசேகா், இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாநிலச் செயலா் பி. காா்த்திக் ராவ் போன்ஸ்லே, இந்து இளைஞா் எழுச்சி பேரவைத் தலைவா் பழ. சந்தோஷ்குமாா், இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஜி. குபேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி. திவாகா் ஆகியோரை காவல் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.