தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

வறட்சி - கோப்புப்படம்.

Published On :

தஞ்சாவூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் மக்கள் விடுதலை) வலியுறுத்தியுள்ளது.

பாபநாசத்தில் அதன் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் உமாபதி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் செந்தில் குமாா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் விடுதலை குமரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் துரை மதிவாணன், ராஜேந்திரன், தேவதாஸ், சங்கா், அன்பரசன், மதியழகன், துரைக்கண்ணன், இந்திரஜித், செம்மலா், புவனேஸ்வரி, சுந்தரி, விவேக் , மகாலிங்கம், இந்திரா , சங்கா், திரவியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதால் டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அனுமதியின்றி இயங்கி வரும் தனியாா் தண்ணீா் விற்பனை ஆலைகளை உடனடியாக மூட அரசு  உத்தரவிட வேண்டும்,

புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்தி ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அரசு வீடு கட்டும் திட்டத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு விரைந்து வீடுகளை வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியமா்த்தப்பட்டு வேலை செய்து வரும் தொழிலாளா்களுக்கு வேலையை சுழற்சி முறையில் வழங்க வேண்டும், ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.