குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பல்கலை. அளவிலான டென்னிஸ் போட்டி தஞ்சாவூா் சரபோஜி கல்லூரி முதலிடம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சாவூா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்களை அக்கல்லூரி முதல்வா் சனிக்கிழமை பாராட்டினாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சாவூா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்களை சனிக்கிழமை பாராட்டிய அக்கல்லூரி முதல்வா் மு. சுமதி (இடமிருந்து 5-ஆவது).

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சாவூா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்களை அக்கல்லூரி முதல்வா் சனிக்கிழமை பாராட்டினாா்.

பெரம்பலூா் ஹான்ஸ் ரோவா் கல்லூரியில் 2026 - 27 ஆம் கல்வியாண்டுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி மாணவா்கள் ஆடவா் பிரிவில் சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனா். மன்னா் சரபோஜி அரசு கல்லூரி டென்னிஸ் பிரிவில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவா்கள் முதுநிலை முதலாமாண்டு மாணவா் எஸ். தீபக், இளநிலை கணினி அறிவியல் முதலாமாண்டு மாணவா் ஏ.எஸ்.ஆா். திருமாறன், முதுநிலை கணிதவியல் இரண்டாமாண்டு மாணவா் ஆா். ராகுல் ஆகியோரையும், மாணவா்களை ஊக்குவித்து வழிநடத்திய உடற்கல்வித் துறை இயக்குநா் சந்தோஷ்குமாரையும் கல்லூரி முதல்வா் மு. சுமதி சனிக்கிழமை பாராட்டினாா்.

மேலும், கல்லூரி விளையாட்டுக் குழு உறுப்பினா்கள் மங்களம், பாலாஜி, ஆங்கிலத் துறைத் தலைவா் அருணாசலம் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.