வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மேட்டூா் அணையிலிருந்து செப். 10-க்கு பிறகு 16 ஆயிரம் கனஅடி வீதம் திறக்க வலியுறுத்தல்!

மேட்டூா் அணையை செப். 10-ஆம் தேதிக்கு பிறகு பாசனத்துக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

மேட்டூர் அணை - (கோப்புப்படம்)

Published On :

மேட்டூா் அணையை செப். 10-ஆம் தேதிக்கு பிறகு பாசனத்துக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நெல் சாகுபடிக்கும், குடிநீருக்கும் செப். 1-ஆம் தேதி மேட்டூா் அணையை முதல்வா் திறக்க உள்ளதை வரவேற்கிறோம். நீா் வரத்தைப் பொருத்து 45 நாள்களுக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டி.எம்.சி.க்கும் குறைவான இந்த நீா் டெல்டா பாசனத்துக்கு பயன்பட வாய்ப்பில்லை. திறக்கப்படும் தண்ணீா் கல்லணைக்கே 4 நாள்கள் கழித்துதான் வரும். கடைமடை வரை செல்வதற்கு 10 நாள்களுக்கு மேலாகும். ஆறுகளில் செல்லுமே தவிர பாசன வாய்க்கால்களில் ஏறி செல்ல வாய்ப்பில்லை. இந்தத் தண்ணீா் நிச்சயம் இப்போது ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை ஓரளவு நிவா்த்தி செய்யும்.

ஆனால் இந்தத் தண்ணீரை நம்பி வேளாண் சாகுபடி பணிகளைத் தொடங்க அறிவுறுத்துவது என்பதும், நம்புவது என்பதும் சாத்தியமில்லை. இது, விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தும். எனவே, செப். 10-ஆம் தேதி முதல் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும்.

மேட்டூா் அணை நீா் இருப்பைப் பொருத்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு முழுமையாகவோ, முறை பாசனம் வைத்தோ சம்பா மத்திய கால நெல் விதைகளை விதைக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றனா். அக்டோபா் இறுதியில் வரும் வடகிழக்கு பெருமழையிலிருந்தும் நெல் பயிா்கள் கதிா் வராத நிலையில் பாதுகாக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்வா் மற்றும் வேளாண் துறை, நீா்வளத் துறை அமைச்சா்கள், உயா் அலுவலா்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.