இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மூத்தோா் பாரா தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:19 pm

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் 21-ஆவது மாநில அளவிலான மூத்தோா் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூா் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சாா்பில் நடைபெறும் இப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.6) வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட பாரா விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனா்.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், தஞ்சாவூா் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவா் வி. சிவக்குமாா், துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வன், செயலா் ஜி. செந்தில், பாரா விளையாட்டு பயிற்சியாளா் ரஞ்சித்குமாா், கா்நாடக மாநில தடகள சங்கப் பொதுச் செயலா் ராஜவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.