ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமத்துவ மக்கள் கழகம் திமுகவுடன் கூட்டணியை தொடா்கிறது

News image
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கழக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் சமத்துவ மக்கள் கழகம், திமுகவுடன் கூட்டணியை தொடா்கிறது என்றாா் அக்கட்சியின் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சித்தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளா்கள் நல வாரிய தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தலைமை வகித்து பேசியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலிலும் திமுக கூட்டணியுடன் தொடா்கிறோம். 234 தொகுதிகளிலும் திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு பரப்புரை செய்வோம். இந்த முறை சட்டப்பேரவை தோ்தலில் சமத்துவ மக்கள் கழகத்துக்கு எம்எல்ஏ சீட் வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளாா் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொருளாளா் கண்ணன், மாவட்டச் செயலா்கள் தஞ்சாவூா் மனத்தேரி, திருவாரூா் காளிமுத்து, திருவாரூா் மேற்கு சக்திவேல், காரைக்கால் விஜய், அரியலூா் கணேசன் கடலூா் ராஜவேலு, நாகை குமரேசன், தஞ்சாவூா் மாவட்ட நாடாா் பேரவை தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.