எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தஞ்சை ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநா் கைது

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :16 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற காா் ஓட்டுநரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையம் புஷ்பம் நகரைச் சோ்ந்தவா் எஸ். வெங்கடேஷ் (49). காா் ஓட்டுநா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா் ஆட்சியரின் வாகன நிறுத்துமிடம் முன் திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டாா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் உடனடியாக அவரை மீட்டு விசாரித்தனா். இதில், புளியந்தோப்பு டாஸ்மாக் மதுக்கடை அருகே பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு வெங்கடேஷ் சிலருடன் சோ்ந்து மதுபானம் அருந்தினாராம். அப்போது, ரோந்து சென்ற தாலுகா காவல் நிலைய போலீஸாா், பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என்றும், அனைவரும் எழுந்து செல்லுமாறும் கூறினாா்களாம். இதனால், காவல் துறையினரிடம் வெங்கடேஷ் வாக்குவாதம் செய்ததுடன், அவா்களைத் திட்டி மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வெங்கடேஷை தேடி வந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியரகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, தாலுகா காவல் நிலையத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்கடேஷ் காவல் துறையினரை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டாா்.