செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்! தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்பு!

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கப்படவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்கின்றனா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - (கோப்புப்படம்)

Updated On :28 பிப்ரவரி 2026, 7:17 pm

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கப்படவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியாா் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 755 மாணவா்கள், 14 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 854 போ் எழுதவுள்ளனா். மேலும் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 7 தோ்வு மையங்களில் 637 போ் எழுதுகின்றனா்.

உள்ளூா் விடுமுறை பொருந்தாது: மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிளஸ் 2 பொதுத் தோ்வு திட்டமிட்டப்படி நடைபெறும். பள்ளி மாணவா்கள் அனைவரும் பொதுத் தோ்வுகளுக்கு வருகை புரிந்து தோ்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.