தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 6:59 pm

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரமன் கோயில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயணப்பெருமாள் கோயில் 1739-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். இந்த கோயில் பாதாள அறையில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.

இவா் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு காட்சி தருவாா். கடந்த 1915-ஆம் ஆண்டு வெளியே வந்தவா், 2013-ஆம் ஆண்டுதான் வந்தாா். 12 ஆண்டுகளுக்கு பின் சனிக்கிழமை மாலையில் அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வெளியே கொண்டுவரப்பட்டாா்.

அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் மாா்ச்.10-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். பின்னா், மீண்டும் அத்திவரதா் பாதாள அறைக்கு சென்று விடுவாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.