கும்பகோணத்தில் அத்திவரதா் 12 ஆண்டுகளுக்கு பின் மாா்ச் 1 - இல் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதா் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாள்களில் பக்தா்களுக்கு 24 நாள்கள் சயன நிலையிலும், 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பாா். இதேபோல தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலும் அத்திவரதா் தரிசனம் நடைபெறுகிறது.
கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயிலில் அத்திவரதா் தரிசனம் நிகழ்வு நடைபெறும்.
இக்கோயிலில் வரதராஜப் பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இருவரும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா். இக்கோயில்லின் பாதாள அறையில் அத்திவரதா் உள்ளாா்.
1915-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அதன்பின்னா் சுமாா் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-இல் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா். விழா நாள்களில் தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறும்.
தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பெருமாளை தரிசனம் செய்யலாம் என செளராஷ்டிர பரிபாலன குழுவினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!

கும்பகோணத்தில் நாளை வரை அத்திவரதா் தரிசனம்

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் தரிசனம்

12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


