அய்யம்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் சங்கக் கிளை திறப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை நியூ டவுன் - சாலைத்தெரு இணைப்புச் சாலை அருகில் தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் ( தொமுச.) கிளை திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன், தொமுச மாநில செயலாளா் மு. சண்முகம் உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு

நகர திமுக செயலா் டி.பி.டி துளசிஅய்யா தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் மா. அழகேசன் முன்னிலை வகித்தாா்,

கிளையை தஞ்சை மாவட்ட தொமுச செயலா் கு. சேவியா் திறந்து வைத்து ஆட்டோ தொழிலாளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com