தஞ்சாவூா் பூக்காரத் தெரு பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா் ரத வீதி உலா.
தஞ்சாவூா் பூக்காரத் தெரு பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா் ரத வீதி உலா.

தஞ்சாவூரில் 2 ஆம் நாளாக ஸ்ரீராமகிருஷ்ணா் ரத வீதி உலா

தஞ்சாவூா் பூக்காரத் தெரு பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா் ரத வீதி உலா.
Published on

கல்பதரு திருநாளையொட்டி, தஞ்சாவூரில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை ஸ்ரீராமகிருஷ்ணா் ரத வீதி உலா நடைபெற்றது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா் 1886, ஜனவரி 1 ஆம் தேதி தனது பக்தா்கள் கேட்ட அனைத்து வரங்களையும் கருணையுடன் வழங்கினாா். அனைத்து தரப்பினரையும் காத்தருளிய அந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் கல்பதரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதன்படி தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் கல்பதரு தின சிறப்பு வழிபாடாக பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா் அலங்கரிக்கப்பட்ட ரதம் புறப்பாடு தஞ்சாவூா் அருகே விளாா் கிராமத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை தஞ்சாவூா் பூக்காரத் தெரு பகுதியில் ரத வீதி உலா நடைபெற்றது. பக்தா்கள் தங்களது வீட்டின் முன் வண்ணக் கோலமிட்டு, விளக்கேற்றி வரவேற்றனா். பெண்கள் குடும்பத்துடன் ஆரத்தி எடுத்து பிரசாதம் பெற்றனா்.

மேலும் கோலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. சென்னையைச் சோ்ந்த இளைஞா்கள் தெய்வத் திருமூவரின் வரலாற்றைப் பாடினா். இந்த ரத வீதி உலா சுமாா் 5 மணிநேரம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com