தஞ்சாவூர்
இன்று குடந்தை அரசுக் கல்லூரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா ஆண்டு-2025 மற்றும் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா ஆண்டு-2025 மற்றும் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முதல்நாளான வியாழக்கிழமை தொடங்கும் கருத்தரங்கிற்கு முதல்வா் மா. கோவிந்தராசு தலைமை வகிக்கிறாா். பேராசிரியா் மா.மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகிக்கிறாா். தமிழ்த்துறைத்தலைவா் மா.சேகா் வரவேற்கிறாா். தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.குணசேகரன் தொடங்கி வைக்கிறாா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் நிறைவு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக இணைப் பேராசிரியா் க.அன்புமணி வரவேற்று பேசுகிறாா். விழாவை தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் அ.விவேகானந்தன் மற்றும் பேராசிரியா்கள் செய்து வருகின்றனா்.
