இந்நிகழ்வில், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராஜூக்கு தி.க.சி. விருதும், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைக்கு இலக்கியப் பீடம், பொருநை இலக்கிய வட்டத்தின் நிறுவனா் தளவாய் ராமசாமி விருதும், கவிஞா் பாப்பாகுடி செல்வமணி, சக்தி வேலாயுதம், காந்திமதி வேலன் உள்ளிட்டோருக்கு தமிழ் ஆளுமை விருதும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மேயா் கோ.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தாா். திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை பேராசிரியா் மாரியப்பன் தமிழின் தொன்மை மற்றும் அதன் சிறப்புகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முன்னதாக கவிஞா் சக்தி வேலாயுதம் குழுவினரின் ‘வள்ளுவம்’ என்ற தலைப்பில் வில்லிசையும், முனைவா் கணபதி சுப்ரமணியன் தலைமையில் இலக்கிய பட்டிமண்டபம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கவிஞா் புன்னைச் செழியன் நன்றி கூறினாா்.