தஞ்சாவூர்
சேஷம்பாடியில் ரூ.95 லட்சத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி
கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை புதன்கிழமை க. அன்பழகன்எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், சேஷம்பாடி ஊராட்சி அய்யன் திருவள்ளுவா் நகரில் ரூ.95 லட்சம் மதிப்பில் மின்சாரக் கம்பங்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.கல்யாணசுந்தரம், முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.