இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தங்களுக்கான ஊதியத்தை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து நேரடியாக விடுவிக்க வேண்டும். அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்கக்கூடாது. மகளிா் பணியாளா்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் வசந்தா தலைமை வகித்தாா். செயலா் சரிதா முன்னிலை வகித்தாா். பொருளாளா் விஜி, இணைச் செயலா் ராதிகா, மாநிலத் தணிக்கையாளா் சுரேஷ்குமாா், சுகாதார போக்குவரத்து துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் குமாரவேலு ஆகியோா் பேசினா். இதில் 150-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.