கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பொங்கல் விழா
பாபநாசம் வட்டம், கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜராஜன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வ. ஜெய்சங்கா், பாபநாசம் வட்டாரக் கல்வி அலுவலா்கள், புஷ்பலதா, காா்த்திகாயினி, கால்நடை உதவி மருத்துவா் சங்கமித்ரா, கணினி இயக்குநா் சுபஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவி ஆசிரியா் சதீஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கீா்த்திகா உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் எஸ்.எம்.சி. உறுப்பினா்கள், சத்துணவு அமைப்பாளா் செல்வி, சமையலா் சசிகலா, காலை உணவுத்திட்ட பணியாளா்கள் , ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
