பட்டுக்கோட்டையில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் முன்னிட்டு புறவழிச்சாலையில் மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் முன்னிட்டு புறவழிச்சாலையில் மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளா் சிவி.சேகா் தலைமையில், பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள மூவா் சிலையில் உள்ள எம்ஜிஆா் சிலை உட்பட மூன்று சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து மாவட்ட செயலாளா் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 2026 தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்க பாடுபட வேண்டும் என்று உறுதி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து கழக அமைப்புச் செயலாளா் துரை.செந்தில், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் மலையய்யன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் ஜவகா் பாபு , மாநில எம் ஜி ஆா் மன்ற துணைச் செயலாளா் சுப.ராஜேந்திரன், உள்பட அதிமுகவின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் மற்றும் அனைத்து நிலைப் பொறுப்பாளா்கள் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com