பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் சனிக்கிழமை  எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தெற்கு மாவட்டச்செயலா் பி.கே.வைரமுத்து.
பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் சனிக்கிழமை எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தெற்கு மாவட்டச்செயலா் பி.கே.வைரமுத்து.

முள்ளிப்பட்டியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா இரவு கொண்டாடப்பட்டது.
Published on

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்சிக்கொடியேற்றப்பட்டு எம்ஜிஆா் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com