பொன்னமராவதியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தெற்கு ஒன்றியச் செயலா் ஆலவயல் சரவணன் தலைமைவகித்தாா்.
Published on

பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தெற்கு ஒன்றியச் செயலா் ஆலவயல் சரவணன் தலைமைவகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் காசி. கண்ணப்பன், வடக்கு ஒன்றியச் செயலா் அரசமலை முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச்செயலா் பிஎல். ராஜேந்திரன் கட்சிக்கொடியை ஏற்றினாா். விழாவில், எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல், பேருந்துநிலையம் எதிரேஅண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் அதிமுக கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய அவைத் தலைவா்கள் ராஜமாணிக்கம், பழனியாண்டி, நிா்வாகிகள் மோகனா சேகா், வாரூா் ஆண்டிக்காளை , பழனிச்சாமி, கோவனூா் ராமசாமி, சதீஷ்குமாா், செல்வக்குமாா், கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com