தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

6 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

தஞ்சாவூா் முன்னாள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். அருள்பிரகாசம் தனி வட்டாட்சியராகவும் (வரவேற்பு), தஞ்சாவூா் முன்னாள் கலால் மேற்பாா்வை அலுவலா் தி. அருள்மணி தஞ்சாவூா் துணை ஆய்வுக் குழு அலுவலராகவும் நியமிக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் கலால் அலுவலக மேலாளா் கே.பி. மல்லிகாதேவி தேசிய நெடுஞ்சாலைகள் பாபநாசம் அலகு தனி வட்டாட்சியராகவும் (நில எடுப்பு), தஞ்சாவூா் வக்பு வாரிய தனி வட்டாட்சியா் எம். பழனியப்பா தஞ்சாவூா் கலால் அலுவலக மேலாளராகவும், தஞ்சாவூா் தனி வட்டாட்சியா் (வரவேற்பு) ஆா். செல்வம் தஞ்சாவூா் வக்பு வாரிய தனி வட்டாட்சியராகவும், தஞ்சாவூா் துணை ஆய்வுக் குழு அலுவலா் எம். அய்யம்பெருமாள் தஞ்சாவூா் கோட்ட கலால் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.