நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

பாபநாசத்தில் சனிக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

பாபநாசத்தில் சனிக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, அவுல் கார தெரு சந்து பகுதியில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இது குறித்து திருப்பாலைத்துறை கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு), பிரபு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேல், பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் காவல் துறையினா் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

முன்னதாக தடைய அறிவியல் பிரிவு உதவி இயக்குநா் காயத்ரி தடயங்களை சேகரித்தாா். இது குறித்து பாபநாசம் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்