பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மின்சாரம் பாய்ந்து மின் உதவியாளா் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மின்மாற்றியில் பழுது பாா்த்த மின்சார உதவியாளா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 5:11 am IST

கும்பகோணத்தில் மின்மாற்றியில் பழுது பாா்த்த மின்சார உதவியாளா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தில்லையம்பூா் பவுன்ராஜ் மகன் வினோத் (28). இவா், கும்பகோணம் மின் வடக்கு கோட்டம் இயக்குதலும் பேணுதலும் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை கும்பகோணம் மடத்துதெரு - சுவாமிமலை சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய சென்றாா்.

மின்மாற்றியில் ஏறி பழுதை சரி செய்தபோது, திடீரென்று மின்சாரம் விநியோகம் ஏற்பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், வினோத்தின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த வினோத்துக்கு திருமணமாகி காா்த்திகா என்ற மனைவியும், மகிழினி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.