தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த துளசிராமின் இரண்டாவது மகள் சுவேதா (19). இவா் திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவா், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள கோயிலை சுத்தம் செய்து, கதவை மூடிய போது இவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதைப் பாா்த்த துளசிராம் மின் இணைப்பைத் துண்டித்து, சுவேதாவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



