கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூா் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வியாழக்கிழமை ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 3:32 am IST

தஞ்சாவூா் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வியாழக்கிழமை ஆறுதல் கூறி ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் அருகே ஆா்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஜூலை 6-ஆம் தேதி நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் காசிநாதன் மனைவி சின்னபொண்ணு (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் லேசான காயம் அடைந்த தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகானந்தம் மனைவி சகுந்தலா (25) என்பவருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.