மன்னாா்குடி பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் மொத்தம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பிவைக்காமல் தேங்கி இருப்பதாக மன்னாா்குடி தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தாலுகா தலைவா் வைர.அய்யப்பன் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா் வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்மணிகளை தமிழகஅரசின் நுகா் பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அந்த நெல்லை மன்னாா்குடி அருகில் உள்ள சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மூவாநல்லூா் செமி குடோன், பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, காளச்சேரி சிறிய குடோன் மற்றும் ஆதனூா், தெற்கு நத்தம், எடையா் நத்தம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்து பிறகு அரவை மில்களுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக்கி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மைக் காலமாக நெல்லை கொள்முதல் செய்வதில் உள்ள கவனம் அந்த நெல்லை பாதுகாப்பதிலும் - பாதுகாத்த நெல்லை அரிசியாக்குவதிலும் தமிழ்நாடு நகா்பொருள் வாணிபக் கழகம் மெத்தனம் காட்டுகிறது.
2025-ஆம் ஆண்டு தொடக்க நிலையில் கொள்முதல் செய்த நெல்முட்டைகள் மேற்படி சேமிப்புக் கிடங்குகளில் 32,837 மெட்ரிக் டன் தேங்கிக் கிடக்கின்றது. இவை அனைத்தும் ஓராண்டுக்கு மேலான நிலையில் முற்றிலுமாக சேதமடைந்து துா்நாற்றம் வீசத் தொடங்கி விட்டது.
நிகழாண்டு தொடக்க நிலையில் கொள்முதல் செய்த சுமாா் 74,668 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளோடு சோ்த்து இன்றைய தினத்தில் மொத்தமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் தேங்கி கிடக்கின்றன
இவைகளை உடனடியாக அரவை மில்களுக்கு அனுப்பாவிட்டால் அனைத்தும் சேதமடைந்துவிடும் என்பதை வேதனை தரும் செய்தி.
மேலும்,சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரவை மில்களுக்கும் முறையாகப் பிரித்து அனுப்பாமல் ஒரு சில மில்களுக்கு மட்டும் சலுகை காட்டியதால் அவா்கள் நல்ல நெல் மணிகளை எடுத்து கொண்டு உபரியை தரம் குறைவு என ஒதுக்கி வைத்ததால் அந்த நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற அரவை மில் உரிமையாளா்கள் மற்றும் வெளி மாவட்ட அரவை மில் முகவா்கள் அனைவரும் அரவைக்கு எடுக்க முன்வராததால் பல லட்சம் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயமும் உள்ளது என்றும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
அத்தோடு கோடை குறுவை நெல்மணிகளை கொள்முதல் செய்ய திறக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமாா் 20 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலிலேயே தேங்கிக் கிடக்கின்றன. மன்னாா்குடி பகுதிகளில் 2 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு நெல்மணிகள் அறுவடைக்காக காத்திருக்கின்றன இந்நிலையில் பழைய நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் சேமிப்புக் கிடங்குகளிலேயே தேங்கிக் கிடப்பதால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகளைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகளில் போதிய இடம் இல்லாத அவலநிலை உள்ளது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகிகள் செயலற்றுள்ளனா்.
நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்யும் அளவிற்கு எங்கள் சங்கத்தில் 1000-க்கும் அதிகமான லாரிகள் இருந்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே இது குறித்து அரசும் அரசு துறை சாா்ந்த அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டுமெனவும் தற்போது கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லும் லாரிகளின் நெல்முட்டைகளை உடனுக்குடன் இறக்கம் செய்ய வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டீசுவரம் கிடங்கில் நெல் மூட்டைகள் சேதம்: இருவா் பணியிடை நீக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான வசதிகள் செய்துத் தர வேண்டும்: புதுகை விவசாயிகள் வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

‘பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரம் டன் நெல் கொள்முதல்’
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



