ரஷியாவின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் சனிக்கிழமை அதிகாலை நடத்திய ட்ரோன் தாக்குதலில், வணிகச் சேமிப்புக் கிடங்கு ஊழியா்கள் 7 போ் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும், 60-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
4.5 ஆண்டுகளை நெருங்கும் இப்போரில் ரஷியாவின் முயற்சிகளை முடக்கும் நோக்கில், அந்நாட்டு எல்லைக்குள் இருக்கும் ராணுவ இலக்குகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் அண்மைக்காலமாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ரஷியாவின் பிரபல ‘வைல்ட்பொ்ரிஸ்’ இணையவழி வா்த்தக நிறுவனத்க்குச் சொந்தமான 2 பெரும் சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கின. ரஷியாவுக்குத் தேவையான ட்ரோன் உதிரிபாகங்கள் மற்றும் நேவிகேஷன் கருவிகளை விநியோகிக்க இந்த மையங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து 360 கி.மீ. தொலைவில் உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கொடோவ்ஸ்க் நகரிலும், தலைநகா் மாஸ்கோவுக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள எலெக்ட்ரோஸ்டல் நகரிலும் உள்ள இரு கிடங்குகளிலும் தாக்குதலால் தீவிபத்து ஏற்பட்டது. இதில்
ட்ரோன்கள் மோதிய வேகத்தில் இரு கிடங்குகளிலும் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொடோவ்ஸ்க் நகர கிடங்கில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள் 7 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். 25 போ் காயமடைந்தனா். மேலும், மாஸ்கோ பிராந்தியத்தில் ட்ரோன் தாக்குதலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதேபோல், எலெக்ட்ரோஸ்டல் பகுதிக்கு அருகே உள்ள நோகின்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு முனையம் ஒன்றும் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அங்குள்ள பிரசவ மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மேலும், ஒரு மழலையா் பள்ளி கட்டடத்தின் மீதும் ட்ரோன் பாகங்கள் விழுந்து தீப்பிடித்தது.
Summary
Ukrainian drone strike on Russian storage depots
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்கா வரி விதிப்பு அச்சுறுத்தலை மீறி ரஷிய கச்சா எண்ணெய்க்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சா்வதேச ஆய்வு நிறுவனம் கணிப்பு

ரஷிய எண்ணெய் கிடங்குகள், கப்பல்கள் மீது தொடரும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள்

சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்







