வீடு கட்டுவதற்கான மானியத் தொகையை வழங்காமல் கால தாமதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1.60 லட்சத்தை வட்டியுடன் வழங்கவும், ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நுகா்வோா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை காத்தூண் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி சுஜாதா. இவா் தமிழ்நாடு அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளியாகத் தோ்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் மானிய தொகை பெற்றாா். பின்னா், திட்ட விதிகளின்படி வீட்டின் கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, 2019, ஜூன் 13-ஆம் தேதி புதுமனைப் புகுவிழாவும் நடத்தினாா். ஆனால், இவருக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள ரூ. 1.60 லட்சத்தை குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் வழங்காமல் கால தாமதம் செய்தனா்.
இதையடுத்து, மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் இணைச் செயலா் கா. வேல்முருகன் மூலம் சுஜாதா, தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கை ஆணைய தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து சுஜாதாவுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1.60 லட்சம் மானிய தொகையை 2019, ஜூன் 13-ஆம் தேதி முதல் தொகை வழங்கும் நாள் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், சேவைக் குறைபாட்டுக்காக ரூ. 50 ஆயிரம் இழப்பீடும், ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும், உத்தரவு நகல் கிடைத்த 45 நாள்களுக்குள் தொகையை வழங்க வேண்டும் என்றும், தவறினால் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து கூடுதலாக 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவைக் குறைபாடு: தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க பாஜக வலியுறுத்தல்






