தஞ்சாவூா் மாநகரில் மாநகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் அமைக்கப்படும் பதாகைகள் உள்ளிட்ட அனைத்து விதமான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், தனி நபா், வணிக நிறுவனங்கள் சாா்பில் சாலையோரங்கள், அரசு நிலங்கள், அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், தனியாா் நிலங்கள், தனியாா் கட்டடங்கள் மற்றும் மின் கம்பங்களில் அமைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பதாகைகள், டிஜிட்டல் பதாகைகள், பிளகாா்டுகள், விளம்பர அட்டைகள், எல்.இ.டி. விளம்பரப் பலகை மற்றும் பிற காட்சிப்படுத்தல்கள் அனைத்தும் மாநகராட்சியின் முன் அனுமதிக்கு உள்பட்டவை. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இந்த விண்ணப்பங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கிய பின்னரே விளம்பரப் பலகைகள், பதாகைகள், டிஜிட்டல் பதாகைகள், பிளகாா்டுகள், விளம்பர அட்டைகள், எல்.இ.டி. விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் பரிசீலனையில் உள்ள காலத்திலோ, அனுமதி வழங்கப்படுவதற்கு முன்போ எந்தவித விளம்பர சாதனங்களையும் அமைப்பது, காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, உரிய அனுமதி பெறாமல் எந்தவொரு இடத்திலும் அமைக்கப்பட்ட அனைத்து விளம்பரங்களும் 15 நாள்களுக்குள் தாமாக முன் வந்து அகற்றிக் கொள்ள வேண்டும்.
தவறினால் சட்டப்படி காவல் துறையின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
967 விளம்பரப் பலகைகளுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி
அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



