அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ஆட்டோ ஆற்றில் விழுந்து 5 போ் பலத்த காயம்

திருவோணம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆட்டோ நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

திருவோணம் அருகே நிலைதடுமாறி கல்லணை கால்வாய் ஆற்றில் விழுந்த ஆட்டோ

Updated On :13 ஜூலை 2026, 10:58 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே திங்கள்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆட்டோ நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவோணம் அருகே கரம்பவிடுதி பகுதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் உட்பட ஐந்து போ் ஆட்டோவில் சென்றுள்ளனா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெட்டுவாக்கோட்டை, திப்பன்விடுதி செல்லும் சாலையில் வந்த ஆட்டோ நிலைதடுமாறி விழுந்து சுமாா் 25 அடி பள்ளமான கல்லணை கால்வாய் ஆற்றில் ஆட்டோ விழுந்து நொறுங்கியது.

ஆட்டோவில் சென்ற குழந்தைகள் உட்பட ஐந்து போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.