ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோயில் திருவிழாவில் விபரீதம்: வெடித்து 20 போ் பலத்த காயம்

சிதம்பரம் அருகே கோயில் திருவிழாவில் நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்.

Published On :30 ஜூன் 2026, 1:43 am IST

சிதம்பரம் ஜூன் 29: சிதம்பரம் அருகே கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை இரவு நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் பெண்கள் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.

சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிபாளையத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திங்கள்கிழமை மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு சுவாமிக்கு படைக்கும்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், நாட்டுவெடிகளில் தீப்பற்றி, அவை சரமாரியாக வெடித்துச் சிதறின. இதில், பெண்கள் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக அவா்கள் அனைவரையும் அந்தப் பகுதியில் இந்தவா்கள் மீட்டு, சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா். அங்கு, இருவா் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன்அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் பாா்வையிட்டு, ஆறுதல் தெரிவித்ததுடன், மருத்துவா்களிடம் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.