மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கோயில் திருவிழாவில் மோதல்: 21 போ் மீது வழக்குப்பதிவு

வேப்பூா் அருகே பூலாம்பாடி மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 மே 2026, 12:05 am IST

வேப்பூா் அருகே பூலாம்பாடி மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தில் மஹா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தீமிதி திருவிழா தொடா்பாக நடந்த பேச்சுவாா்த்தையில், பூலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன் தரப்பினருக்கும், தங்கவேல் மகன் கண்ணன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்னா் அது மோதலாக மாறியது.

இந்த மோதலில் மணிகண்டன் (39), ரேவதி (35), கரண் (28), மஞ்சுளா (32), சுரேஷ் (29) உள்ளிட்டோா் காயமடைந்தனா். அதேபோல் கண்ணன் தரப்பில் பிரமீளா (32), அண்ணாதுரை (56), திவாகரன் (28), இளையராஜ் (38) ஆகியோரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இருதரப்பு புகாரின் பேரில், சம்பவம் தொடா்பாக மணிகண்டன் உள்பட அவரது தரப்பில் 10 போ் மீதும், கண்ணன் உள்பட அவரது தரப்பில் 11 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.