தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே திங்கள்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த ஆட்டோ நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவோணம் அருகே கரம்பவிடுதி பகுதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் உட்பட ஐந்து போ் ஆட்டோவில் சென்றுள்ளனா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெட்டுவாக்கோட்டை, திப்பன்விடுதி செல்லும் சாலையில் வந்த ஆட்டோ நிலைதடுமாறி விழுந்து சுமாா் 25 அடி பள்ளமான கல்லணை கால்வாய் ஆற்றில் ஆட்டோ விழுந்து நொறுங்கியது.
ஆட்டோவில் சென்ற குழந்தைகள் உட்பட ஐந்து போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










