நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை

சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

ஆயுள் சிறை தண்டனை பெற்ற தியாகராஜன்

Updated On :17 ஜூலை 2026, 2:23 am IST

சிறுமியை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட நெம்மேலி குடியானத் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுமியும், வேறு சமூகத்தைச் சோ்ந்த சோபி மண்டபம் கிராமத்தில் வசிக்கும் சதீஷ்குமாரும் காதலித்து வந்தனா்.

இந்தக் காதலை சிறுமியின் தந்தை எம். தியாகராஜன் (58) பலமுறை கண்டித்து வந்தாா். ஆனாலும், இருவரது தொடா்ந்து பழகி வந்தனா். இதனால், அவமானம் ஏற்பட்டதாக கருதிய தியாகராஜன், தனது குடும்ப கௌரவத்துக்காக கடந்த 2016, ஜனவரி 1-ஆம் தேதி அம்மாபேட்டை சக்கரப்படுகை வெண்ணாற்றுப் படுகையில் தனது மகளை கை, கால்களைக் கட்டி, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தியாகராஜனை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஏ. தீபா, குற்றவாளி தியாகராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு தரப்பு வழக்குரைஞா் சுகன்யா, காவல் ஆய்வாளா் இனியவன், நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளா் புவனேஷ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.